Search
Search

பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

pranayama yoga steps in tamil

பிராணன் என்பது நம் உடலில் உள்ள சக்தியே. அதாவது சுவாசப்பையின் இயக்கத்தை அடக்கி ஆள்வதாகும். இதனை தான் பிராணாயாமம் என்று சொல்கிறோம்.

இந்த அற்புத சக்தியை தெரிந்து கொண்டு அதை சரியாக இயங்க வைத்தால் அதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இயற்கையான காற்றை சுவாசிக்கும் மனிதன் ஆரோக்கியத்துடன் நோயின்றி வாழ்கிறான்.

நுரையீரலை சரியாக பயன்படுத்தி சரியாக சுவாசிக்க பழகவேண்டும். பிராணாயாமம் செய்வதற்கு சித்தாசனம், வஜ்ராசனம் அல்லது ஸ்வஸ்திக் ஆசனம் இவைகளில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து இந்த பயிற்சியை செய்து வரலாம். பிராணாயாமத்தில் அமரும்போது மார்பு, கழுத்து, தலை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

pranayama yoga steps in tamil

சுகப் பிராணாயாமம்

இதை பத்மாசனத்தில் அமர்ந்து சுலபமாக செய்யலாம். முதலில் இடது நாசித் துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். சிறிது நேரம் மூச்சை உள்ளே அடக்கிய பிறகு வலது மூக்குத் துவாரம் வழியாக காற்றை வெளியிட வேண்டும். இந்த பயிற்சியை தினமும் ஐந்து முறை செய்து வரலாம்.

ஆதம் பிராணாயாமம்

மார்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு நீண்ட சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இதன்மூலம் காற்றானது நுரையீரலின் கீழ் பாகத்தை கடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நிலையில் 3 முதல் 6 முறை சுவாசித்து பலன் பெறலாம்.

மத்யம் பிராணாயாமம்

நுரையீரலின் மத்திய அல்லது நடு பாகத்தின் சுவாசத்தைக் கட்டுப்படுத்த ஒரு கையை இரண்டு மார்புகளுக்கு இடையில் வைக்க வேண்டும். நீண்ட உள்மூச்சை இழுத்து வெளிவிடும்போது கையானது வெளிப்புறமாக நகர்வதை உணரலாம். இவ்வகை – பிராணாயாமத்தில் மூன்று முதல் ஆறுமுறை சுவாசிக்கலாம்.

ஆத்யம் பிராணாயாமம்

நுரையீரலின் மேல் பாகத்தின் சுவாசத்தை கட்டுப்படுத்த ஒரு கையை மேல் மார்பின்மீது அதாவது தோள்பட்டை எலும்புக்கு கீழே வைத்துக் கொள்ள வேண்டும்.

நீண்ட உள்மூச்சை இழுத்துப் பின் வெளியிட வேண்டும். அப்போது கை விரல்கள் மேல்புறமாக உயருவதைக் காணலாம். அப்போது தசைகள் அசைவதைத் தவிர்க்க வேண்டும்

இந்நிலையில் மூன்று அல்லது ஆறு முறை சுவாசிக்கலாம். அப்போது மார்புக் கூட்டின் மேல்பாகத்தில் மனதைச் செலுத்திவர வேண்டும்.

வியாக்ர பிராணாயாமம்

புலி போன்று சுவாசிக்கும் முறையில் உதரவிதானத்தைப் பலப்படுத்தி சுவாசம் பயிலலாம். இம்முறையால் சுவாசிக்கும் திறன் அதிகரித்து பிராணாயாமப் பயிற்சியினால் மேல் மூளைப் பகுதியை அதிகமாகச் செயல்பட வைக்க முடியும் இதனால் மூளையின் சுலாச மண்டலத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

பிராணாயாமப் பயிற்சியினால் சுத்தம் செய்யப்படும் இரத்தம் உடல் முழுவதும் பரவ முடியும். அதனால் உடலிலுள்ள கரப்பிகள் நன்றாக இயங்கும் திறனைப் பெறுகின்றன. தீய உணர்சசிகள் கட்டுப்பட்டு பொறுமை, நிதாளம், நட்பு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகள் மேலோங்கும்.

பல்வேறு காரணங்களால் ஏற்படும் இறுக்க நிலை குறைந்து உடல், மனம் அமைதியுறும் பிராணாயாமப் பயிற் சியினால் முகம் தேஜஸ் பெறும். நரம்புத்தளர்ச்சி. களைப்பு யாவும் நீங்கி சுறுசுறுப்படையும். எவனொருவன் பிராணனைக் கட்டுப்படுத்த அறிந்திருக்கிறானோ அவனே உலகில் உள்ள எல்லா சக்திகளையும் கட்டுப்படுத்த வல்லவனாகிறான்.

சுவாசத்தைக் கட்டுப்படுத்துபவனுக்கு மனதையும் கட்டுப்படுத்த முடியும். பிராணாயாமம் பயில்பவருக்கு நல்ல தோற்றம், மகிழ்ச்சி, உயிர் சக்தி, நல்ல பலம், தேக ஆரோக்கியம், மனதை ஒருமுகப்படுத்தும் வல்லமை யாவும் ஏற்படும்

நாடி சுத்தி பிராணாயாமம்

நாடிகள் அசுத்தம் நிறைந்து இருக்குமானால் வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம். எனவே பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

பஸ்திரிகா

நாடி சுத்தியில் இது ஒரு வகையாகும். பஸ்திரிகாவில் பலவகை உண்டு. பத்மாசனத்தில் அமர்ந்து இருபது தடவைகள் கபாலபதி பயில வேண்டும் உள்மூச்சு, வெளிமூச்சின் போது வேகமான சப்தம் வரவேண்டும். இது அடிவயிற்றிற்கும் நுரையீரலுக்கும் ஏற்ற பயிற்சியாகும். இதனால் ஆஸ்துமா காசநோய், மூக்குத் தொந்தரவுகள் கட்டுப்படும்

சித்காரி பிராணாயாமம்

நாக்கை மடித்து சுவாசம் செய்வதற்கு சித்காரி பிராணாயாமம் என்று பெயர். இந்த வகைப் பிராணாயாமத்தில் வாயினால் சத்தம் எழுப்பப்படுகிறது.

சித்காரியில் வாயைச் சிறிது திறந்து நாக்கின் நுனியை முன் வரிசைக்கீழ் பற்களைத் தொடுமாறு மடக்கி வைத்துக் கொண்டு சிறிதாகக் காற்றை உள்ளிழுத்தல் வேண்டும்.

சிறிது நேரம் அடங்கிய பின்னர் மூச்சை இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக வெளியிட வேண்டும். இந்த வகை பிராணாயாமத்தில் தாகம், பசி, சோம்பல் முதலியன நீங்கு கின்றன. இதனால் குண்டலிளிசக்தி அதிகரிக்கும்.

ப்ரமாரி பிராணாயாமம்

இந்த பிராணாயாமம் தேனீ போல் ஒலி எழுப்பும் வகையாகும்.

இந்த சுவாசத்தை பயிலும்போது தேனீ போன்று ஒலி யெழும்பும். எனவேதான் ப்ரமாரி என்று இது பெயர் பெற்றது.

உள்மூச்சின் போது வாய்மூடி இருக்க வேண்டும். இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை வெளியிடும்போது பெண் தேனீ உண்டாக்கும் சப்தம் போல உண்டாக்க வேண்டும்.

மூச்சை உள்ளிழுக்கும்போது சப்தம் எழுப்புவது சிரமம் என்றாலும் படிப்படியாக முயற்சி செய்து பயிலலாம் இந்தச் சப்தம் குறட்டையைப் போன்று மெதுவாகவும் சீராகவும் இருக்கும். இந்தவகை பிராணாயாமத்தால் கண், காது, மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளுக்கு நன்மை உண்டாகும்.

பிராணாயாமத்தால் உடலிலுள்ள அனைத்து சுரப்பிகளும் நன்றாக இயங்கும் திறனைப் பெறும்.

You May Also Like