Search
Search

நடுவானில் பறந்த விமானம்.. பிரசவலியில் துடித்த இளம்பெண்..! நடந்தது என்ன?

பெங்களூருவில் இருந்து ஜெய்பூருக்கு இன்று அதிகாலை 5:45 மணிக்கு 6E 460 இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, பெண் பயணி ஒருவர் பிரவச வலியால் கதறி உள்ளார். இதனை பார்த்த சகபயணிகள் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பணி பெண்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்து பணி பெண்கள், அந்த விமானத்தில் வந்த பெண் மருத்துவர் சுபகானா நசீர் என்பவருடன் சேர்ந்து பிரசவ வலியால் துடித்த அப்பெண்ணுக்கு விமானத்தின் உள்ளேயே பிரசவம் பார்த்தனர்.. அப்பிரசவத்தில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பார்த்த சக பயணிகள், மருத்துவருக்கும், பணி பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த விமானம் காலை 8 மணிக்கு ஜெய்ப்பூரை வந்தடைந்ததும். சரியான நேரத்தில் உதவி செய்த மருத்துவர் சுபகானா நசீருக்கு இண்டிகோ நிறுவனத்தினர் ஜெய்பூர் விமான நிலையத்தில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

You May Also Like