சந்தோஷ் நாராயணன் இசையில் “ப்ராஜெக்ட் K” – பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்

அட்டகத்தி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தான் பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
தொடர்ச்சியாக இவர் இசையில் வெளியான பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா போன்ற அனைத்து படங்களும் இசைக்கென்று பெரிய அளவில் பாராட்டப்பட்ட படங்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சுமார் 11 ஆண்டுகளாக இந்த துறையில் பயணித்து வரும் சந்தோஷ் நாராயணன் தற்பொழுது டாப் லிஸ்ட் இசையமைப்பாளர்களின் பட்டியலில் உள்ளார்.
இந்த 2023ம் ஆண்டு தல அஜித்தின் 62வது படத்திற்கு இசையமைப்பதும் இவர்தான், மேலும் விரைவில் வெளியாகவிருக்கும் லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு திரைப்படமான ப்ராஜெக்ட் X படத்திற்கும் இசையமைத்து வருகின்றார் சந்தோஷ். ப்ராஜெக்ட் X சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம். கடந்த பிப்ரவரி 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் என்றபோதும் பெருந்தொற்று காரணமாக படபிடிப்பு தள்ளிப்போனது.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜனவரி 12 2024ல் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துவருகின்றனர்.