ராதேஷ்யாம் திரை விமர்சனம்
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ராதாகிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் வசிக்கும் பிரபாஸ் புகழ் பெற்ற கைரேகை நிபுணர். தன்னுடைய வாழ்க்கை எதுவரை என்று அவரே கணித்து வைத்திருக்கிறார். அதே ரோம் நகரில் பூஜா ஹெக்டே டாக்டர் ஆக இருக்கிறார்.
பூஜா ஹெக்டே மருந்தே கண்டு பிடிக்க முடியாத வியாதியால் பாதிக்கப்படுகிறார். அவருடைய வாழ்நாள் அறுபதே நாட்கள்தான் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிறகு ஒரு சந்திப்பில் பிரபாஸ், பூஜா தங்கள் மனதைப் பறி கொடுக்கிறார்கள். தங்கள் எதிர்காலம் பற்றி மருத்துவ ரீதியாகத் தெரிந்தவரும், ஜோதிடம் ரீதியாகத் தெரிந்தவரும் காதலில் விழுகிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காதல் காட்சிகளாக செல்கின்றன. அற்புதமான வெளிநாடு லொகேஷன்கள் கிராபிக்ஸ் காட்சிகள் என இயக்குனர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
பிரபாஸை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்த்தவர்கள், இந்தப் படத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக மட்டுமே பார்க்க முடியும். கதாநாயகி பூஜா ஹெக்டே தன்னுடைய அழகால் வசீகரிக்க வைக்கிறார்.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக வேலையும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. கப்பல் கேப்டன் ஆக சில காட்சிகளில் வந்து போகிறார் ஜெயராம்.
ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமனின் பின்னணி இசை காதலுடன் கை கோர்க்கிறது.
படத்தின் மேக்கிங்கிற்காகவும், பிரபாஸ், பூஜாவின் நடிப்பிற்காகவும் மட்டும் படத்தைப் பார்க்கலாம்.
