உலகிலேயே மிகப்பெரிய பூ எது? அதன் சிறப்பு என்ன?

ராப்லிசியா ஆர்னல்டை என அழைக்கப்படும் பூவே உலகில் மிகப் பெரிய பூவாகும். இந்தப் பூ சுமத்திராத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பூவின் குறுக்களவு ஒரு கஜம். இந்தப் பூவின் ஒவ்வொறு இதழும் ஒர் அடி நீளம் வரை இருக்கும்.

இந்தப் பூவினுடைய எடை 15 ராத்தல்களாகும். இந்தப் பூவில் மிக அதிக அளவில் தேன் இருக்கும். இந்தப் பூவிலிருந்து சுமார் 12 புட்டி அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை காலன் பூந்தேன் இருக்கும்.
இந்தச் செடிக்கு இலைகள் இல்லை. கிளைகள் இல்லை. அதனால் இது ஓர் ஒட்டுண்ணி வகையாகும்.
இதன் வேர், காளானின் வேரைப் போன்றே காணப்படும். இவ்வகைச் செடிகள் பிரண்டை போன்ற செடிகளின் வேர்த் திசுக்களுக்குள் புகுந்து வளரும்.
இந்தச் செடியினுடைய பூ (அழுகிய) கெட்டுப் போன மாமிசம் போன்ற வாடை வீசும், இந்த மாமிச வாசனையினால் கவரப்பட்ட ஈக்கள் இந்தப் பூவிலுள்ள தேனை உண்ணவரும்.
ஆர்னல்டு ஜோசப், ராபில்ஸ் என்ற இருவரும் தான் இந்தப் பூவைக் கண்டுபிடித்தனர். எனவே அவர்கள் நினைவாக ராப்லிசியா ஆர்னல்டை என பெயர் சூட்டப்பட்டது.