Search
Search

இது ஒரு திரைக்காவியம்.. சூரி நடிப்பு பிரமிப்பு – மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

வெற்றிமாறன், பெயருக்கு தகுந்தார் போல் வெற்றியை மட்டுமே கண்டு வரும் ஒரு ஆகச் சிறந்த இயக்குனர். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தான் விடுதலை. விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் கதையின் நாயகன் இல்லை என்ற பொழுதும் அவருடைய கதாபாத்திரம் மிக கனமான ஒன்றாகவே இருந்தது.

பல ஆண்டு காலங்கள் இந்த சினிமா துறையில் கூட்டத்தில் ஒருவராக நின்று, பிறகு சின்னஞ்சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து. பிறகு காமெடியின் உச்சத்திற்கு வந்து, இப்பொழுது தன் மேல் இருந்த காமெடியன் என்கின்ற அந்த ஒரு பிம்பத்தை மாற்றி இவரே இந்த கதையின் பொருத்தமான நாயகன் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து உள்ளார் நடிகர் சூரி.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை நேற்று பார்த்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவர்களை அழைத்து பாராட்டி இருக்கிறார். மேலும் தற்பொழுது அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் “விடுதலை இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம், இது ஒரு திரைக் காவியம். சூரியன் நடிப்பு பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் தமிழ் திரை உலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவரை நேரில் சென்று சந்தித்த நடிகர் சூரி அவர்கள் வெளியிட்டார் பதிவில் “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

You May Also Like