அனுமதி மறுக்கப்பட இதுதான் காரணம் : ரோகினி திரையரங்க சர்ச்சை – விளக்கம் கொடுத்த நிர்வாகம்

இன்று சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் பத்து தல, இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்களில் நரிக்குறவ பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் படம் பார்க்க வந்துள்ளார். ஏற்கனவே இது குறித்த செய்தியையும் நமது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.
மேலே குறிப்பிட்டுள்ள அந்த செய்தியை முழுமையாக படிக்க…
அவ்வாறு திரையரங்கம் வந்த அந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை, அவர்கள் கையில் டிக்கெட் இருந்த நிலையிலும் அவர்களை திரையரங்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் ரோகினி திரையரங்க நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், சிம்புவின் பத்து தல திரைப்படம் U/A சான்றிதழ் கொண்ட திரைப்படம், ஆகவே 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்க்க அனுமதியில்லை. எனவே எங்கள் ஊழியர்கள் அந்த பெண்களுடன் வந்த 2, 6, 8 மற்றும் 10 வயது உடைய குழந்தைகளை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் நிலைமை வேறுவிதமாக மாறிய நிலையில் அங்கு வந்த அனைவரையும் படம் பார்க்க அனுமதிதாகவ கூறி அந்த காணொளியை வெளியிட்டுள்ளது.