பறவை காய்ச்சல் நேரத்தில் சிக்கன் முட்டை சாப்பிடலாமா?

கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதற்குள் பறவை காய்ச்சல் தொற்று பரவி வருகிறது. பறவைகள் மூலம் நேரடியாக மனிதருக்கு இந்த நோய் பரவும்.

தற்போது கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த பறவை காய்ச்சல் மனிதர்கள் மூலம் பரவுமா என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பறவைகளுடன் நேரடி தொடர்பு இருந்தாலோ அல்லது தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளை சாப்பிடுவதன் மூலமாகவோ மனிதர்களுக்கு இது பரவும்.

இந்த சமயத்தில் சிக்கன் முட்டைகளை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. உங்கள் சந்தேகத்தை தீர்க்கவே இந்த பதிவு.

இறைச்சி வகைகளை நன்கு சுத்தம் செய்து தீயில் சமைக்கும்போது அதிலுள்ள கிருமிகள் மற்றும் வைரஸ்கள் அழிந்துவிடும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இருப்பினும் தொற்று பரவும் சூழ்நிலையில் கூடுதலாக கவனம் செலுத்தி அவற்றை நன்றாக சுத்தம் செய்து தீயில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்காமல் புதிதாக கடையில் வாங்கி வந்து உடனே சமைத்து சாப்பிடுவது நல்லது. 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்து சாப்பிடவேண்டும் அப்போதுதான் அதில் உள்ள கிருமிகள் அழியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

முட்டை வாங்கும்போது அது சுத்தமாகவும் புதிதாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முட்டையை வேக வைக்கும் போது ஓட்டிலிருந்து முட்டையை கசிந்து வெளியே வந்தால் அதை சாப்பிடாதீர்கள்.

உணவகங்களில் சிக்கன், முட்டை உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அது நன்றாக வேகவைத்து சமைக்கப்பட்டதா? இறைச்சி பழையதா புதியதா என்பது நமக்கு தெரியாது. முடிந்தவரை கவனமுடன் இருப்பது நல்லது.

Recent Post