கார்த்தியின் சர்தார் திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சர்தார். கார்த்தி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
கார்த்தியின் தந்தை ராணுவத்தில் உளவாளியாக இருக்கிறார். அவரை தேசத்துரோகி என்று இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார். இதனால் அவருடைய குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது.
மகன் கார்த்தியை அவருடைய சித்தப்பா முனீஸ்காந்த் வளர்த்து வருகிறார். பிறகு போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். இந்நிலையில் கார்த்தியிடம் வழக்கு ஒன்று கிடைக்கிறது. அந்த வழக்கு அவரது அப்பா சர்தாரிடம் கொண்டு செல்கிறது. சர்தார் கார்த்தி ஏன் தேசத்துரோகியாக அறிவிக்கப்பட்டார்? அவர் செய்த தவறுகளை என்ன? என்பதே படத்தின் கதை.

அப்பா, மகன் என இரு வேடங்களிலும் கார்த்தி நடிப்பில் அசத்தியுள்ளார். அவரை தாண்டி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் இருக்கிறது. ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது.
படத்தில் கதை மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மித்ரன். ஒரு ரா ஏஜென்ட் என்னவெல்லாம் செய்து விட முடியுமோ அதனை நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் காட்சிகளால் நமக்கு புரிய வைத்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாதியில் 1980-களில் நடைபெறும் பிளாஷ்பேக் காட்சிகளும் ரஷிதா விஜயன் கார்த்தியை காதலிக்கும் காட்சிகளும் ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டுள்ளன.
பிரபல யூடியூபர் ரித்விக், லைலா, ராஷிகண்ணா, ரஷிதா விஜயன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஆனால் பாடலில் கவனம் செலுத்த தவறிவிட்டார்.
மொத்தத்தில் சர்தார் தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.