இரவில் தூங்கினால் வியர்வையா..? அப்ப இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு இருக்கு..!

சரியான காற்றோட்ட வசதி, வெப்பநிலை சீராக இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களுக்காக, பலருக்கும் இரவில் தூங்கும் போது வியர்வை ஏற்படும். இது சாதாரண விஷயம் தான். ஆனால், சில நேரங்களில், சரியான அளவு காற்றோட்டம் இருந்தும், வியர்வை ஏற்படும். இது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறி. அது பற்றி தற்போது இந்த கட்டூரையில் பார்க்கலாம்.

sweating a lot at night

வியர்வை வருவதற்கான காரணங்கள்:-

தைராய்டு:

அதிக தைராய்டு பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இரவு நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். இரவு தூங்கும்போது, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை இருக்கும், இதய துடிப்பும் வேகமெடுக்கும், கைகள் நடுங்கத்தொடங்கும். இந்த அறிகுறிகளில் ஏதோனும் ஒன்றோடு, வியர்வை வந்தால், அது அதிக தைராய்டு இருப்பதாக அர்த்தம்.

சர்க்கரை:

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதன் காரணமாகவும், இரவு தூங்கும்போது, அதிக வியர்வை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதாவது, நீரழிவு நோய் கொண்ட சிலருக்கு, தூங்குவதற்கு முன்பு, சர்க்கரை அளவு சரியாக இருக்கும். ஆனால், தூங்கிய பிறகு, அதன் அளவு குறைந்துவிடும். நீரழிவு நோயாளிகள், அதிக அளவு உழைப்பு, இரவில் தாமதமாக சாப்பிடுதல் என இருந்தால், இந்த பிரச்சினை எழலாம்.

மருந்துகள்:

காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சாப்பிடும் மருந்துகள் கூட இரவில் வியர்வை வெளிப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும். மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு இரவில் அதிகமாக வியர்த்தால் மருத்துவரை அணுகி மாற்று மருந்து சாப்பிடுவது நல்லது.

இதுமட்டுமின்றி, மேலும் பல பிரச்சனைகள் இருந்தாலும், இரவில் வியர்வை அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த பிரச்சனைகள் இருந்தாலும், மருத்துவரை அனுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.