ஏலியன் கதையா இருந்தா எப்படி இருக்கும்?.. தளபதி 68 – இயக்கப்போவது அவர் தானா?

தற்பொழுது தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஒரு மாபெரும் நடிகர் தான் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67வது திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஏற்கனவே மாஸ்டர் என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது உருவாகி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளபதியின் 68வது திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் ஜீவா, சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் விஜயன் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவருடைய 68வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு ஒரு முறை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் பேசும்போது “ஒருவேளை விஜய் அவர்களை ஏலியன்கள் கடத்திக்கொண்டு அவர்கள் இடத்திற்கு போய்விட்டால், எப்படி இருக்கும், அப்படி ஒரு கதை எழுத எனக்கு மிகவும் ஆசை” என்று கூறியிருந்தார்.
உண்மையில் தளபதி 68 படத்தை அவர் இயக்கி, அந்த ஏலியன் கதையை எடுத்தால் அது வேற லெவல் ஹிட்டாகும். தளபதி விஜயை பொறுத்தவரை Fantasy போன்ற வித்யாசமான கதை களத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுபவர் என்பதை நாம் அறிவோம்.
சரி என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..