தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் புகார்..!

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் மீது தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “துஷார் என்பவர் தீபாவளி வாழ்த்து கூறியதில் இருந்து எனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக நான் சந்தேகம் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் கொடுத்து இழுக்க முயற்சி செய்ததாக முதலமைச்சர் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆளும் டிஆர்எஸ் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் தமது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் புகாரை முன்வைத்துள்ளார்.