கொரேனா எப்போது முடிவுக்கு வரும்? – உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரேனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகமாகும் வல்லுநர்கள் எச்சரிக்கை கொரேனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது.

எந்த அறிவியல் காரணமுமின்றி அரசியல் காரணங்களுக்காகவே பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாகவும் டெக்சாஸ் பல்கலைகழக வைரஸ் ஆய்வாளர் பெஞ்சமின் நியூமான் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளை தளர்த்த கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவில் வேகமாக பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Advertisement

கொரேனா வைரஸ் தடுப்பு மருந்து இந்த ஆண்டு முடியும் வரை கண்டுபிடிக்க இயலாது. அதனால் இரண்டாவது அலை தோற்று சிறிய அளவில் தொடங்கி அடுத்த ஆண்டு முடியும் வரை தொடர்ச்சியாக இருக்கும். கொரேனா பரவலின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.