தளபதியுடன் இணையும் வெற்றிமாறன் – இயக்குநர் தமிழ் கொடுத்த சூப்பர் அப்டேட்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் மிக மும்முரமாக நடித்து வருகின்றார். சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்ற லியோ படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகின்றது.
இது ஒருபுறம் இருக்க, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 1 திரைப்படம் நாளை மார்ச் 31ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. தணிக்கைக்குழு இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 13 இடங்களில் வசனங்கள் mute செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூரிக்கு இது ஒரு திருப்புமுனை திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைவாரா? என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்து வந்த நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார் டாணாக்காரன் இயக்குநர் தமிழ்.
அவர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெற்றிமாறன், தளபதி விஜயுடன் இணைவது உறுதியான தகவல் தான் என்று நம்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.