Search
Search

பசுபதி நடிப்பில் தண்டட்டி.. வெளியான ரிலீஸ் தேதி மற்றும் இரு முக்கிய அறிவிப்பு!

தனது 24-வது வயதிலேயே மேடை கலைஞராக களம் இறங்கி பல மேடைகள் கண்ட நடிகர்தான் பசுபதி. சென்னை அடுத்த வண்ணாந்துறை என்ற இடத்தில் பிறந்த பசுபதி இளம் வயது முதலிலேயே நடிப்பில் ஆர்வம் உள்ளதால் மேடை கலைஞராக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ்புல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று பல மொழிகளில் இவர் தொடர்ச்சியாக படங்களை நடித்து வருகிறார்.

பா. ரஞ்சித் அவர்களுடைய இயக்கத்தில் உருவான சர்பட்டா பரம்பரை திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல திருப்முனை கொடுத்த திரைப்படம் என்றே கூறலாம். தற்போது மீண்டும் விக்ரமுடன், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பசுபதி அவர்கள் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் தண்டட்டி என்ற திரைப்படம் குறித்த தகவல் இப்பொழுது வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் நடிகர் பசுபதி இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், டிரைலர் மற்றும் இசை வெளியீடு வருகின்ற ஜூன் மாதம் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like