தனது மனைவியின் பெயரை நாய்க்கு வைத்ததால் பக்கத்து வீட்டுக்கு பெண்ணுக்கு நடந்த சோகம்

குஜராத் மாநிலத்தில் மனைவியின் பெயரை நாய்க்கு வைத்த பக்கத்து வீட்டுப் பெண் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்தவர் நீடாபென் சர்வையா. இவர் தனது வீட்டு செல்ல நாய்க்கு சோனு என்று பெயர் வைத்துள்ளார். இது அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த பர்வாத் என்பவரின் மனைவியின் பெயர்.
இந்நிலையில் திங்கள்கிழமை நீடாபென்ணின் கணவரும் பிள்ளைகளும் வெளியே சென்றுவிட்டனர். அப்போது பர்வாத் மற்றும் 5 பேருடன் இந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து தனது மனைவியின் பெயரை நாய்க்கு வைத்ததே கண்டித்துள்ளனர். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த கும்பல் நீடாபென் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். நீடாபென்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் தண்ணீர் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.