Search
Search

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 1.5 கோடி : புதிய சேவை அறிமுகம்

latest tamil news

பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் காலை சுப்ரபாதம் முதல் இரவு ஏகாந்த சேவை வரை நாள் முழுவதும் பெருமாளை தரிசிக்க புதியதாக உதய அஸ்தமன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 1.5 கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலையில் நடை திறந்து முதல் அர்ச்சனை, கல்யாண உற்சவம், ஏகாந்த சேவை என இரவு வரை பல்வேறு சேவைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்க்ளுக்கு அந்தந்த சேவைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நாள் முழுவதும் அதாவது காலை முதல் இரவு வரை பெருமாளை தரிசிக்கும் வகையில் உதய அஸ்தமன சேவை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சேவையில் கட்டணம் செலுத்தி பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை என 25 ஆண்டுகளுக்கு பெருமாளை தரிசிக்க முடியும்.

இதன் மூலம் கிடைக்கும் நிதியை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செலவு செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You May Also Like