கீர்த்தியுடன் காதல் : மனைவியுடன் சண்டை – தளபதி விஜய் பற்றி அவதூறு ட்வீட் போடும் பிரபலம்

தளபதி விஜய் மிகப் பெரிய இயக்குனரின் மகனாக இருந்த பொழுதும் தமிழ் சினிமா துறை அவருக்கு எளிதில் எந்த வாய்ப்புகளையும் கொடுத்து விடவில்லை. “இதெல்லாம் ஒரு மூஞ்சா” என்று கேலி செய்த பலரின் மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் விஜய்.
ஒரு மனிதன் உச்சத்திற்கு வரும் பட்சத்தில் அவர் பெரும் பாராட்டுக்கள் ஒருபுறம் என்றால் அவர் சந்திக்கும் எதிர்ப்புகளும் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் தளபதி விஜய்க்கும் அது அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரும், சென்சார் துறையில் பணி செய்து வருபவருமான உமைர் சாந்து என்கின்ற ஒருவர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்கும் காதல் இருப்பதாகவும். சமீபத்தில் விஜய் கீர்த்திக்கு ஒரு ஆடம்பர சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் இது அவருடைய மனைவிக்கும் தெரியும் என்றும் இந்த காதலில் அவருக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும் முதலில் கூறிய அவர், இருதினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீட்டில் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் கடுமையாக சண்டை நடந்ததாகும்.
இதற்கு காரணம் விஜய்யின் ரகசிய காதல் தான் என்றும், விஜய்க்கு அவர் இறுதி எச்சரிக்கையை அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.