உடம்பில் உள்ள அனைத்து அவயங்களையும் வலுப்படுத்தும் ஆசனம் வஜ்ராசனம் ஆகும்.
வஜ்ராசனம் செய்முறை
தரைவிரிப்பில் அமர்ந்து இருகால்களின் மூட்டுக்களையும் தரையில் அழுத்தமாக பதியும்படி செய்து இருகால்களையும் உட்புறமாக மடக்க வேண்டும்.
முதுகுக்கு பின்புறம் இரு உள்ளங்கால்களும் மேல்நோக்கி இருக்கும், இந்நிலையில் குதிங்கால் மீது ப்ருஷ்ட பாகத்தை வைத்து உட்கார வேண்டும்.
இரு உள்ளங் கைகளும் இருமூட்டுகள் மீது இருக்க வேண்டும். சுவாசத்தை நன்றாக இழுத்து பின் வெளியிட வேண்டும். இதுவே வஜ்ராசனம் ஆகும்.
வஜ்ராசனத்தின் பயன்கள்
- உடம்பு வஜ்ரம் போல் ஆகும்
- இரு கால்களும் வலுவுரும், அழகுரும்.
- மார்பு, வயிறு சமபந்தமான பிணிகள் எதுவும் அணுகாது.