Search
Search

தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்

neem oil benefits for skin in tamil

வேப்ப மரத்திலிருந்து உருவாக்கப்படும் வேப்ப எண்ணெய் அதிக நன்மைகள் கொண்ட எண்ணெய் ஆகும்.

வேப்ப எண்ணெயில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வாரத்திற்கு ஒரு முறை உடலில் நன்கு தடவி குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளைமை தோற்றத்தை அதிகரிக்கும்.

உடலில் அடிப்பட்ட இடங்களில் வேப்ப எண்ணெயை தேய்த்தால் சீக்கிரம் கிருமிகள் இறந்து காயங்கள் குணமாகும் தன்மை கொண்டது.

neem oil benefits for skin in tamil

வேப்பம் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்

மழைக்காலங்களில் பலருக்கு காலில் சேற்று புண்கள் ஏற்படுவது உண்டு, அவர்கள் பாதங்களில் வேப்ப எண்ணெயை தேய்த்தால் புண்கள் குணமாகும். மேலும் உடலில் படர்தாமரை போன்றைவ ஏற்படுபவர்களுக்கு வேப்ப எண்ணெய் ஓர் சிறந்த மருந்தாக இருந்து வருகிறது.

தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் புற்றுநோய்க்கும் சிறந்த மருந்து வேப்ப எண்ணெய். இது புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் உடலில் வேப்ப எண்ணெய் தடவி விட்டு காலையில் எழுந்து நன்கு கழுவ வேண்டும். இது மாதிரி தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் சொரியாசிஸ் பிரச்சனை நீங்கும்.

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

வேப்ப எண்ணெயுடன் சுத்த தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து, உடலில் தேய்த்து விட்டு இரவில் படுத்தால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளில் இருந்து தப்பிக்கலாம்.

சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேப்ப எண்ணெயை 2 துளி மூக்கில் விட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை தீரும்.

You May Also Like