விடுதலை பாகம் 1 சூப்பர் ஹிட் – பாடுபட்ட கலைஞர்களுக்கு Surprise கொடுத்த வெற்றிமாறன்

கடந்த 2019ம் ஆண்டு விதையிடப்பட்டு, தொடர்ச்சியாக பல கலைஞர்கள் இணைந்து உழைத்து இன்று திரைகளில் மின்னுகின்ற படம் தான் விடுதலை பாகம் 1. வெற்றிமாறன், சினிமாத்துவம் என்பதை தான் எதார்த்த கதைக்களத்தை கொண்டு படங்களை உருவாகும் ஒரு சிறந்த இயக்குநர்.
விடுதலை படத்தை பொறுத்தவரை பல தடங்கல்களை தாண்டி உருவாக்கி, மக்களிடையே பெரும் வரவேற்பையும் இப்போது பெற்றுள்ளது. இந்நிலையில் தனது படத்திற்காக அயராது உழைத்த பணியாளர்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கியுள்ளார் வெற்றிமாறன்.
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் RS infotainment எல்ரெட் குமார் இணைந்து இந்த படத்தில் பணியாற்றிய லைட் மென்கள், கார்பென்டர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு Surprise கொடுக்கும் வகையில் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
முதல் பாகம் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே துவங்கிவிட்டது என்றே கூறலாம்.