இந்தியன் 2.. நடிகர் விவேக்கின் காட்சிகள் இடம்பெறுமா? – பாபி சிம்ஹா விளக்கம்!

சிறிது கால ஓய்வுக்கு பிறகு தற்பொழுது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காளிதாஸ் ஜெயராம், குரு சோமசுந்தரம், ஐயா டெல்லி கணேஷ், தீபா ஷங்கர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் மறைந்த இரு மாபெரும் நடிகர்களான திரு. விவேக் மற்றும் அய்யா மனோபாலா அவர்களும் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தது அனைவரும் அறிந்த. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் விவேக் அவர்களின் காட்சிகள் இடம் பெறாது என்று பலரும் நினைத்த நிலையில், ஒரு சிறப்பான செய்தி கிடைத்துள்ளது.
நிச்சயம் விவேக் அவர்களுடைய காட்சிகள் இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் என்றும் முதல் முறை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் விவேக், ஒரு மாபெரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் இந்த படத்தில் நடித்த பிரபல நடிகர் பாபி சிம்ஹா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
ராம் சரணின் Game Changer படத்தை முடித்த நிலையில், மீண்டும் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சங்கர்.