விரைவில் வருகிறது தேவர் மகன் 2 – எப்போது?

0
762

1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் தேவர் மகன். இப்படத்தை இயக்குநர் பரதன் இயக்கி, கமல்ஹாசன், சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி போன்றோர் நடிப்பில் வெளியானது. மேலும், இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் தேவர் மகன் 2-ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார்.

அவர் அறிவித்த சில கணங்களில் இந்திய அளவில் #thevarmagan2  என்ற  ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தேவர் மகன் 2-ம் பாகத்திற்கு ரசிகர்கள் பலரும் சமுக வலைத்தளங்ளில் ஆதரவு தொிவித்து வருகின்றனர்.

தற்போது கமல்ஹாசன் சங்கர் இயக்கும் ‘இந்தியன்-2’ படத்திலும், சபாஷ் நாயுடு என்ற படத்திலும் நடித்துக் கொண்டுருக்கிறாார் என்பது குறிப்பிடத்தக்கது.