நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த பூவை சாப்பிடுங்கள்

எந்த விதமான நிலத்திலும் வளரக்கூடிய அரிய மருத்துவ மூலிகை செடிதான் இந்த ஆவாரம் பூ மரம்.

ஆவாரம் பூவை பறித்து சுத்தப்படுத்தி, துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

ஆவாரை கீரையை விட அதன் பூவைதான் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப் படாமல் இருப்பதற்கு ஆவாரம் பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது.

இதன் விதை, வேர், இலை, அரும்பு, பட்டை, பூ என அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவையாகும். செடியிலிருந்து எண்ணெய், கசாயம், சூரணங்கள் செய்து நாட்டு வைத்தியர்கள் மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

நீரிழிவு நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக ஆவாரம் பூ பயன்படுகிறது. ஆவாரம் பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து நீண்ட காலம் வாழலாம்.

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க வேண்டியவை

மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள் அதிகளவில் நார்ச்சத்துமிக்க உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

விரதமில்லாத நேரங்களில் அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். இனிப்பு இல்லாத பானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்சுலின் எடுத்துக் கொண்டால், ஒரு நாளில் பலமுறை ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.

அதிகளவில் பழங்கள், காய்கறிகளை . எடுத்துக் கொள்ளுங்கள்.

விரதமிருக்கும்போது அதிக குறைந்த அளவு சர்க்கரை அறிகுறிகள் தென்பட்டால் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

சர்க்கரை அளவு 70 mg/dL அளவிற்கு குறைந்தாலோ 300 mg/dL அளவுக்கு அதிகமானாலோ விரதம், நோன்பை கைவிடுவது நல்லது.

எண்ணெயில் பொரித்த உணவுகள் இனிப்புகள் மற்றும் காபியை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

விரதம் இருக்கும்போது அதிக அளவில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

எந்த நேரத்திலும் டாக்டரின் ஆலோசனையைப் பெறாமல் மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது.

ரமலான் நோன்பு இருக்கும் நீரிழிவு நோயாளிகள், நோன்புக்கு ஓரிரு மாதங்கள் முன்பே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ரத்த அழுத்தம் கொழுப்பு சத்து, சர்க்கரை அளவு மாறுபாடுகள் உள்ளவர்கள் நோன்பு காலங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.