தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.

தெலுங்கானா மாநிலம் பொடிச்சன் பள்ளி கிராமத்தை சேர்ந்த சாய்வர்தன் என்ற 3 வயது சிறுவன் தனது மாமா வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகில் உள்ள புதிதாக தோண்டப்பட்டு மூடப்படாத 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்தது.

குழந்தையை மீட்பதற்காக 12 மணி நேரம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இன்று காலை குழந்தை உயிரிழந்து விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement

English : 3-year-old falls into 120-feet Telangana borewell, body recovered after hours of rescue operation