டிரம்ப் போட்ட சர்ச்சை பதிவை நீக்கியது ஏன்? – பேஸ்புக் விளக்கம்

சர்ச்சையான குறியீட்டுடன் அதிபர் டிரம்ப் போட்ட பிரச்சார வீடியோவை அதிரடியாக நீக்கியது பேஸ்புக் நிறுவனம்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக அதிபர் டிரம்ப் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிபர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சையான குறியீட்டுடன் ஒரு பிரச்சார வீடியோவை பதிவிட்டிருந்தார்.

Donald Trump

அந்த பதிவில், சிவப்பு வண்ணத்தில் தலைகீழாக முக்கோணம் ஒன்று இடம்பெற்றிருந்தது. துணை அதிபர் மைக் பென்ஸ்-ம் அதே முக்கோண குறியீட்டுடன் பதிவிட்டிருந்தார். இதனை நீக்கிய பேஸ்புக் நிறுவனம், இது வெறுப்புணர்வை தூண்டும் நாஜிகளின் (Nazi) குறியீடு என பேஸ்புக் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

Advertisement

இதுப்பற்றி விளக்கமளித்த டிரம்பின் பிரசாரக் குழு, இது வெறுப்புணர்வை தூண்டும் குறியீடு அல்ல என தெரிவித்துள்ளது. இதேபோல், சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை, 2 மணி நேரத்திலேயே வன்முறையை தூண்டும் பதிவு என அறிவித்து டுவிட்டர் அதனை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Removes Trump’s Political Ad Campaign For Violating Policies.